SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-08-21@ 11:39:49

பென்னாகரம் : விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், வறண்டு கிடந்த ஒகேனக்கல் அருவிகளில், தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக கர்நாடக பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகமாக இருந்தது.

இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்தால் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் விடுமுறை தினமான ேநற்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால், ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்