SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றால அருவிகளில் குறையாமல் கொட்டும் தண்ணீர்

2017-08-10@ 09:47:45

தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் வெயிலடித்தாலும் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு கடந்த 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வெயிலடித்து வருகிறது. இதனால் சீசன் களை இழந்து காணப்பட்டது. கடந்த வாரம் இரண்டு நாள் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் தொடர்ந்து மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று வரை தண்ணீர் நன்றாக விழுகிறது.நேற்றும் பகல் வேளையில் சுள்ளென்று வெயிலடித்தது. மாலையில் இதமான சூழல் நிலவியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்