SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பத்தூர் பகுதிகளில் கனமழை ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

2017-08-02@ 13:55:47

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் ெகாட்டி வருகிறது. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் தகவலறிந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு குளித்து மகிழ்ந்தனர். மேலும், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி கால்வாய் வழியாக செல்வதால், கரையோரம் உள்ள ஜடையனூர், பிச்சனூர், மடவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய நிலங்கள், கிணறுகள் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்