SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலத்தில் திடீர் சாரல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

2017-07-20@ 14:47:22

தென்காசி: குற்றாலத்தில் நேற்று மதியம் இதமான சூழலுடன் சிறிது நேரம் மெல்லிய சாரல் பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சாரலே இல்லாமல் வெயிலடித்து வந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு மேல் வானில் மேகமூட்டம் திரண்டது. திடீரென மெல்லிய சாரல் பெய்தது. அவ்வப்போது வெயிலும், சாரலும் மாறி மாறி காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மெயினருவியில் ஆண்கள் பிரிவில் பரவலாகவும், பெண்கள் பிரிவில் மிதமாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் பரவலாக தண்ணீர் விழுந்தது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் மிகவும் குறைவாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்