SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரியில் சாரல் மழை குளுகுளு காலநிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள்

2017-07-20@ 14:45:53

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று சாரல் மழையுடன் இதமான காலநிலை நிலவியதை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை வழிபடுகின்றனர். தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு களிக்கின்றனர். பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திலிருந்து படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றி பார்க்கின்றனர். தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவதால் கடந்த 2 மாதமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை.

மேலும் அரசு அருங்காட்சியகம், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சூரிய அஸ்தமனம் போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். கன்னியாகுமரியில் கடந்த இரண்டு மாதமாக கோடை சீசன் நடைபெற்றது. இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 12 லட்சத்து 89 ஆயிரத்து 343 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் அனைவருமே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீண்ட நேரம் சுற்றி பார்க்காமல் உடனுக்குடன் புறப்பட்டனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்றுமுன்தினம் இரவு முதல் சாரல்மழை பொழிய ஆரம்பித்தது தொடர்ந்து நேற்றும் அதிகாலையில் மழை பெய்தது.

இதனால் கன்னியாகுமரியில் இதமான வானிலை நிலவியது. நேற்று வந்த சுற்றுலா பயணிகள் இங்கு நிலவிய ரம்மியமான குளுகுளு சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாறைகளில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். மேலும் செல்போன்களில் இயற்கை காட்சிகளை படம் பிடித்து, நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திய நிலையில் நேற்று ரம்மியமான காலநிலைய நிலவியதால் சுற்றுலா பயணிகள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்