SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் குளுகுளு காற்று சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

2017-07-17@ 13:59:27

கொடைக்கானல் : கொடைக்கானலில் குளுகுளு காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது அதிகமான காற்று வீசி வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், ஆடி மாதத்தை வரவேற்பதை போல் பலத்த காற்று வீசுகிறது.

இதனால், நகரெங்கும் ஜிலுஜிலு என தட்பவெப்ப நிலை நிலவுகிறது. வார விடுமுறையை கொடைக்கானலில் அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
பிரையண்ட் பூங்காவில் உள்ள வண்ண மலர்களின் முன்னே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வார நாட்களில் டல்லாக காணப்பட்ட கொடைக்கானல் நகரம், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகையால் களை கட்டியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்