SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றால அருவிகளில் குறைவாக விழும் தண்ணீர் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்

2017-07-12@ 12:22:45

தென்காசி : குற்றாலத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு பகல் முழுவதும் இதமான சூழல் நிலவியது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இரண்டு வாரமாக நல்ல வெயிலடித்து வந்த நிலையில் நேற்று சற்று ஆறுதலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவியது.

சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாக விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் குறைவாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் பரவலாக காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்