SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாரல் மாயமானதால் தண்ணீர் குறைந்தது குற்றாலத்தில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்

2017-07-10@ 11:52:26

தென்காசி : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் கடந்த பத்து தினங்களாக சாரல் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. அத்துடன் வெயிலும் அடித்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாக விழுகிறது.

பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களில் ஏராளமானோர் படையெடுத்து வந்திருந்தனர். அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் அனைத்து அருவிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் கார் பார்க்கிங் பகுதி வரை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்