SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள் லைப் ஜாக்கெட் இல்லாததால் அச்சம்

2017-07-10@ 11:51:07

பென்னாகரம் :  ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள், லைப் ஜாக்கெட் இல்லாததால் சவாரியை தவிர்த்து திரும்பி செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லும் ஒன்று. இங்குள்ள ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை கண்டு ரசிக்கவும், காவிரியில் பரிசல் சவாரி செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு மொத்தம் 414 பரிசல்கள் உள்ளன. ஒரு சவாரிக்கு ₹750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதில், பரிசல் ஓட்டிக்கு ₹600 போக, மீதமுள்ள ரூ.150 வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று விடும். அதை கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுக்கு முன்பு, பரிசல் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6  பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர். ஒரு பரிசலில் 4 பேர் மட்டுமே ஏற வேண்டும் என்ற நிலையில், கூடுதலாக ஆட்களை ஏற்றிச்சென்று, பரிசல் ஓட்டிகள் விபத்தில் சிக்க வைக்கும் சம்பவங்களும் நடந்தன.

இவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான விதிகளை கொண்டுவந்தது. அதன்படி, லைப்ஜாக்கெட் அணிந்தே சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். பரிசல் ஓட்டிகள் கூடுதலாக ஆட்களை ஏற்றக்கூடாது. ஆபத்து மிகுந்த இடங்களில் பரிசலை கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து விபத்துக்கள் ஓரளவு குறைந்தன.
 
தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள், பரிசல் சவாரிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், லைப்ஜாக்கெட் இல்லாததால் உயிருக்கு பயந்து பரிசல் சவாரியை புறக்கணித்து திரும்பி செல்கின்றனர்.

இதனால் பரிசல் ஓட்டிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 414 பரிசல்கள் உள்ள நிலையில், வெறும் 300 லைப் ஜாக்கெட் மட்டுமே உள்ளது. எனவே, ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த தேவையான வசதிகளை செய்து தரவேண்டுமென சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்