Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மேஷம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 10:01:17

மே 19 முதல் 25 வரை - திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா


உதவி செய்வதில் மனநிம்மதி காணும் மேஷ ராசி மாதரசியரே... பொதுவாக எந்த ஒரு காரியத்தையும் விரைவாக செய்து முடிக்க எண் ணும் நீங்கள் இந்த வாரத்தில் உங்கள் பேச்சுத்திறமையினால் சாதிப்பீர்கள். உங்கள் பேச்சினில் உள்ள நியாயத்தை அடுத்தவர்கள் புரிந்துகொள்ளும்  விதமாக தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். தன ஸ்தானத்தின் வலிமையால் பண வரவு கூடும்.  சேமிப்பு உயர்வடையும்.

புதிய சொத்து வாங்கும் முயற்சி பயன் தரும். பிறந்த வீட்டு வழி உறவினர்கள் உதவி கேட்டு நாடி வருவர். காது, மூக்கு,  தொண்டைப் பகுதியில் உண்டாகும் கோளாறுகள் உடல்நிலையில் சற்று சிரமத்தைத் தரலாம். 20, 21 தேதிகளில் அநாவசிய பிரயாணத்தைத் தவிர்ப் பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். குடும்பப் பெரியவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர் களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

கணவரின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். அண்டை அயலாரோடு இணைந்து  பொதுப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய  வேண்டியிருக்கும். பேச்சுத்திறமையால் காரியத்தை சாதிக்கும் வாரம் இது.

சந்திராஷ்டமம்:

24ம் தேதி மாலை 5 மணி முதல் 25ம் தேதி வரை கவனத்தோடு இருக்கவும்.

பரிகாரம்:

சரஸ்வதி தேவியை வணங்கி வாருங்கள்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran