தொடர்புகள்

முகப்பு

உலக தமிழர்

தொடர்புகள்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பஹ்ரைனில் சமூக சேவையாற்றும் தமிழ் பெண்

11:37
10-2-2014
பதிப்பு நேரம்

பஹ்ரைன் : பஹ்ரைனில் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றி வருகிறார் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியினைச் சேர்ந்த அஞ்சலை பொன்னுசுவாமி. கடந்த வாரம் அமீரகம் வருகை புரிந்த இவருக்கு தினமலர் நாளிதழ் சார்பில் வாழ்த்து கூறப்பட்டது. இவர், திருமணத்திற்குப் பின்னர் கடந்த 1983 ஆம் ஆண்டு பஹ்ரைனில் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு பயிலாவிட்டாலும் கணவரின் ஆதரவினால் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

சுனாமியின் போது கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் பல்வேறு உதவிகள் செய்தவர். பஹ்ரைனில் தமிழர்கள் எதிர்பாராதவிதமான அல்லலுக்குள்ளாகும் போது உதவிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு கணவரின் மறைவுக்குப் பின்னர் தனது மகனுடன் பஹ்ரைனில் வசித்து வரும் இவர் தனது வாழ்வினை பொதுச்சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். இவரது சேவைகள் தொடர வாழ்த்துவோம்.

அஞ்சலையுடன் தொடர்பு கொள்ள :

அலைபேசி : 973 - 3982 66 22 ;
மின்னஞ்சல் : angela2000bh@yahoo.com.....

துபாய் ராசல் கைமாவில் பொங்கல் விழா: சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்பு

துபாய் ராசல் கைமாவில் பொங்கல் விழா: சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்பு

14:16
4-2-2014
பதிப்பு நேரம்

ராசல் கைமா: துபாயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இராசல் கைமா கடற்கரை நகரில் செயல்பட்டு வரும் இராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா 7.02.2014 அன்று மாலை 6.30 மணிக்கு இந்தியப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் இந்தியன் கன்சல் ஜெனரல் அலுவலகத்தின் துணை கன்சல் ஜெனரல் மதுரை அசோக் பாபு, துபாய் பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமை செயல் இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். சின்னத்திரை கலைஞர்கள் ம.க.ப. ஆனந்த், சாலினி, பழனி, அமுதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களை மகிழ்விக்கும் வண்ணம் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

மேலும் குழந்தைகள் நடனம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் ஹபீப் 050 647 28 68, மாசானராஜ் 055 961 6377 உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம்.....

தமிழக சிறுவனின் ஒருங்கிணைப்பில் ஜுன் 21 இல் ஷார்ஜாவில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி

11:45
20-6-2013
பதிப்பு நேரம்

ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார நகரமாம் ஷார்ஜாவில் 13 வயது தமிழக சிறுவன் ஹுமைத் நடத்தி வரும் பசுமை பூகோளம் ( Green Globe ) எனும் அமைப்பின் சார்பில் ஷார்ஜா கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணி 21.06.2013 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்பணி ஷார்ஜா பெண்கள் சங்கத்தின் அருகாமையில் நடைபெறும். இப்பணிக்கு ஷார்ஜா நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பீஅஹ் ( Bee’ah ) எனும் நிறுவனம் உறுதுணை வழங்கியுள்ளது.ஷார்ஜா பள்ளியில் பயின்று வரும் ஹுமைத் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை அமீரக தகவல் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராகப் பணி புரிந்து வருகிறார்.

இடம் குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 71 77 123 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


....

நவம்பர் 2ம் தேதி, துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தின் 11வது ஆண்டு விழா

15:34
26-10-2012
பதிப்பு நேரம்

துபாய்: துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தின் 11வது ஆண்டு விழா நவம்பர் 2ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு துபாய் இந்திய‌ ப‌ள்ளி ஷேக் ராஷித் அரங்கில் ந‌டைபெற‌ உள்ளது.

துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தின் 11வது ஆண்டு விழா அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு துபாய் இந்திய‌ ப‌ள்ளி ஷேக் ராஷித் அரங்கில் ந‌டைபெற‌ உள்ளதாக நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் ஏ.முஹ‌ம்ம‌து தாஹா தெரிவித்துள்ளார்.

இதில் ஆசியாவின் புக‌ழ் பெற்ற‌ நட‌ன‌ குழுவான‌ சிங்கப்பூர் மாயா தியேட்ட‌ர் குழுவின‌ரின் க‌ண்க‌வ‌ர் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ளது. இந்த குழுவினர் முத‌ல் முறையாக‌ வ‌ளைகுடா ப‌குதியில் த‌ங்க‌ள‌து க‌லைத்திற‌னை வெளிப்ப‌டுத்த‌ உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பின்ன‌ணி பாட‌க‌ர்க‌ள் மால‌தி, பிரியா, ர‌விச‌ங்க‌ர், ஷியாம், பிர‌காஷ் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களின் இனிய குரலால் பாடி ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்விக்க‌ உள்ளனர். பிரபல மிமிக்கிரி கலைஞர்களான ரோபோ ச‌ங்க‌ர் ம‌ற்றும் அர்விந்த் ஆகியோரின் க‌லக்க‌ல் காமெடியும் இட‌ம் பெற‌ உள்ளது.

நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் இல‌வ‌ச‌ முன் அனும‌தி சீட்டு பெற வேண்டும். முன் அனும‌தி சீட்டு பெற‌ 050 467 4399 என்ற செல்போன் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.....

துபாய்யில் 26ம் தேதி செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்ச்சி

15:35
25-10-2012
பதிப்பு நேரம்

துபாய்: துபாய் ஸ்மைல் அமைப்பின் சார்பாக செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்ச்சி வரும் 26ம் தேதி மாலை அல் ஸ‌பா ப‌குதியில் அமைந்துள்ள‌ ஜே.எஸ்.எஸ் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ உள்ளது.

துபாய் ஸ்மைல் அமைப்பின் சார்பாக செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்ச்சி வரும் 26ம் தேதி மாலை அல் ஸ‌பா ப‌குதியில் அமைந்துள்ள‌ ஜே.எஸ்.எஸ் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ உள்ளதாக, நிக‌ழ்ச்சியின் அமைப்பாள‌ர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிக‌ழ்வில் திரைப்ப‌ட‌ பின்ன‌ணி பாட‌க‌ர்க‌ளான மாணிக்க‌ விநாய‌க‌ம், மால‌தி, ம‌துமிதா ஆகியோர் ப‌ங்கேற்க உள்ளனர்.

இது குறித்து மேலும் விபரங்களுக்கு 052 8388370 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது semasinger2012@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.....

வரும் 20ம் தேதி சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல்

17:12
19-10-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பான தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பான தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி மாலை 4.30 முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இடுகுவிஸ்ட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1 சோபியா ரோடு, நம்பர் 7-13 பீஸ் சென்டர், சிங்கப்பூர்-228149 என்ற முகவரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் அதிநவீன விஞ்ஞான வளர்ச்சி கண்டு வரும் கம்ப்யூட்டர் யுகத்தில், சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் உருவாகி வரும் மாறுதல்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்களை குறித்தும், அவைகளை போட்டி திறன்மிக்க யுக்திகள் கொண்டு எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 63981020 என்ற தொலைப்பேசி எண்ணிலும், Email: contact@jmcalumni.org.sg என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். ஆனால் குறைந்த இருக்கைகளே மீதமுள்ளதால், முன்பதிவு அவசியம்.

இது குறித்து கூடுதல் விபரங்களை www.jmcalumni.org.sg என்ற இணையதளத்தில் காணலாம்....

பிரான்சில் நடந்த எம் ஜி ஆர் விழா 2012

18:41
18-10-2012
பதிப்பு நேரம்

செயின்ட்-டெனிஸ்ஸ்: பிரான்ஸ் எம் ஜி ஆர் பேரவை, எம் ஜி ஆர் விழா 2012ஐ பாரீஸ் அருகில் உள்ள செயின்ட்-டெனிஸ்ஸ் நகரத்தில் லேழியூன்- தோனெற் மண்டபத்தில் நடந்தியது. பேரவை நிறுவனத் தலைவர் முருகு பத்மநாபன் தலைமையில, பிரான்ஸ் தமிழ் சங்கத் தலைவர் பா. தசரதன், நகர மன்ற உறுப்பினர் அலங் ஆனந்தன், தேவகுமாரன், யோகானாந்த அடிகள், தலிஞ்சன் முருகையா முன்னிலையில், ஆனந்தராமன் அன்பழகன் கோபாலகிருஷ்ணன் வரவேற்ப்புரை ஆற்ற, சென்னையிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சார்லி, பத்திரிக்கையாளர்கள் விஜயன், சிங்காரவேல் உரையாற்றினர். நகர மன்ற துணை மேயர் திருமதி. பாவிலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆடல், பாடல், நடனம், நாட்டியம், இசை நிகழ்ச்சிகளும் நடந்தது. பேரவை பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.....

மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இன்பச் சுற்றுலா

18:26
18-10-2012
பதிப்பு நேரம்

மானஸா: கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்ஸானியாவில் உள்ள மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மான்ஸாவில் இருந்து 10 மைல் தொலைவில் பஹாரி பவுன்டி பீச்சிக்கு, சங்கத்தினர் இன்பச் சுற்றுலா சென்றனர். முஹம்மது ரஃபி அனைவரையும் வரவேற்றார். குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஸ்ரீனிவாசன் நடத்திய பாட்டுகுப்பாட்டு போட்டி, கல்யாணசுந்தரம் நடத்திய இசை நாற்காலி போட்டி, கிரேஸி வினோபா நடத்திய மவுன மொழி சுற்று நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இன்பச் சுற்றுலா ஏற்பாட்டினைச் செய்ய துணைநின்ற சங்கத் துனைத் தலைவர் டாக்டர். ஷரீஃப், முத்து, மணிகண்டன் ஆகியோரை சங்கத் தலைவர் எஸ்.முஹம்மது ஹோஷ்மின் பாராட்டினார். பென்ஸன் நன்றி கூறினார்.
....

தொழில்நுட்பவியலாளர் கழகம்

சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம்

14:45
22-1-2012
பதிப்பு நேரம்

சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம்

Mailing Address:
ITTPO                                         
3106 Pepita Court
San Jose, CA 95132
U. S. A....

தமிழ் சங்கம்!

இந்தோனேஷியா தமிழ் சங்கம்

11:17
22-1-2012
பதிப்பு நேரம்

இந்தோனேஷியா தமிழ் சங்கம்

Jl. Palmerah Barat 142-143, Jakarta 10270.
    Ph.(021) 5300476, 5300478
    Fax. (021) 535 0050
....

12  Next   Last 

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

டால்டா 13இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமை வியாரவல்லா. 13 வயதிலேயே அவருக்குப் புகைப்பட ஆர்வம் வந்தது. 13 வயதிலேயே  திருமணம் நடந்தது. பிறந்த ...

திடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா? உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’  செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement
Advertisement

மருத்துவம்


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உயர்வு
உதவி
தடை
கவலை
தன்னம்பிக்கை
மகிழ்ச்சி
வெற்றி
தர்மம்
திறமை
மீட்பு
பிரச்னை
கவலை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran