SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நதிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வருகிறது தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் : மத்திய அமைச்சர் தகவல்

2018-04-17@ 14:40:54

டெல்லி : நாடு முழுவதும் நிலவக்கூடிய நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடுவர்மன்றங்களுக்கு பதிலாக தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்  தலைமையில் 5 மாநிலங்களின் நீர் ஆதாரத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேசிய அளவில் அமையவிருக்கிற நடுவர் மன்றம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு நீர் பாசன வசதிகளையும் ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

காவிரி, நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பதிலாக ஒரே ஒரு நதிநீர் நடுவர் மன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான  நதிநீர் பிரச்சனை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்டிற்கு வரும்போது அதன் தீர்ப்பை இறுதியானதாக இருக்கும் என்றும் அதனை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தி ஆக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்