SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி-மும்பை இடையே ரூ.1 லட்சம் கோடி செலவில் விரைவுச்சாலை-நிதின் கட்கரி

2018-04-17@ 13:53:33

டெல்லி: டெல்லியையும் மும்பையையும் இணைக்கும் வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாள்தோறும் டெல்லிக்குள் 40,000க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் நுழையும் நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு அதிகரிப்பதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் அறிக்ககையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் டெல்லி, மும்பை விரைவு சாலைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் பயன் பெறும் வகையில் விரைவு சாலை அமைக்கப்பட்டு அது டெல்லி, மும்பை சாலையுடன் இணைக்கப்படும் திட்டம் உள்ளதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்