SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் வன்முறை.. ஊழல்கள் .. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பாஜக எம்.பி.க்களுக்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம்

2018-04-17@ 13:00:04

டெல்லி : பாரதிய ஜனதா அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்து அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய கட்சி எம்பிக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 4 ஆண்டு ஆட்சியின் இறுதியில் வாக்காளர்களின் மதிப்பினை மோடி அரசு இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டில் ஊழல் மலிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றன்பின் ஒன்றாக வங்கி மோசடிகள் வெளியாகி வருவதை சுட்டி காட்டியுள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள சின்ஹா, பாலியல் வன்முறை சம்பவங்கள் தினசரி நிகழ்வாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலான பாலியல் வன்முறை சம்பவங்களில்  பாரதிய ஜனதா கட்சியினரே ஈடுபட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீது எப்போதும் இல்லாத அளவிற்கு அடக்குமுறைகள் கட்ட அவிழ்த்துவிடப்பட்டதாகவும், சட்டம் மூலம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பிரச்னைகள் குறித்து பாஜக தலைமையிடம் கட்சி எம்பிக்கள் துணிவுடன் பேச வேண்டும் என்றும் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார். பிரச்னைகளை பேசாமல் அமைதி காத்துக் கொண்டிருந்தால் எதிர்கால இந்தியா உங்களை மன்னிக்காது என்றும் தமது கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்