SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

2018-04-17@ 12:30:23

பழனி: பழனி முருகன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோவில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டு கோவில் அலுவலர்கள், பள்ளிமாணவிகள் என ஏராளமானோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாளில்  2 கோடியே 7லட்சத்து 24ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. 1கிலோ தங்கத்திலான பொருட்கள் 9கிலோ வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மலேசியா, சிங்கப்பூர்,அமெரிக்கா, ஜப்பான் கரன்சிகளும் உண்டியல்களில் இருந்தது. உண்டியல் பணம் எண்ணும் பணி இன்றும் தொடர்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்