SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலையுதிர் காலம் முடிந்ததால் ரப்பர் மரங்களில் பால் வெட்டும் பணி தொடங்கியது

2018-04-17@ 12:24:40

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கியமான தொழில்களில் ஒன்று ரப்பர் விவசாயம். அரசு ரப்பர் கழகம் சார்பில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இது போன்று சிறிய, பெரிய என பல தனியார் ரப்பர் எஸ்டேட்களும் உள்ளன. ரப்பர் மரங்களில் பால் வெட்டும் தொழில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்ந்து விடுவதால் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு மரங்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும். அதன்பின்னர் ரப்பர் மரங்கள் துளிர் விட்டு வளரத்தொடங்கும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை பெய்யத் தொடங்கியதும் ரப்பர் மரத்தில் மீண்டும் பால் வெட்டும் பணி தொடங்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியதும் கடந்த 2 வாரகாலமாக குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இது பால்வெட்டும் பணி தொடங்குவதற்கு உகந்த காலம் என்பதால் தற்போது குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வடிக்கும் பணி தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணி மற்றும் அதனை சார்ந்த பணிகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை மாத காலத்திற்கு பிறகு பால்வெட்டும் பணி தொடங்கியுள்ளது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரப்பர் போதிய விலை கிடைக்காமல் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உற்பத்தி இல்லாத பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக விலை உயரும். ஆனால் சில ஆண்டுகளாக இந்த கால கட்டத்திலும் வெளிநாட்டு இறக்குமதி மற்றும் சர்வதேச மார்க்கெட் விலை வீழ்ச்சியால் ரப்பர் விலை உயரவில்லை.தற்போது கிலோ 106 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் உள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ரப்பர் உற்பத்தி திறன் குறைந்துவிட்டதால் பல சிறு குறு விவசாயிகள் போதிய வருவாய் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் ரப்பர் பால்வெட்டும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்காத நிலை உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்