SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆலங்குடியில் குடிநீர் தட்டுப்பாடு : தண்ணீர் பிடிக்க காத்து கிடக்கும் அவலம்

2018-04-17@ 12:23:19

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை கிராமத்தில் கடந்த 1 வருட காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர். ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை, மேலப்பட்டியில் வடக்கு வீதி, நடுவீதி ஆகிய பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்குவதற்காக இப்பகுதியில் ஆழ்துளை கிணறுடன் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, ஒருசில பகுதிக்கு மட்டும் தண்ணீர் செல்கிறது. மேலும், மேல்நிலைத்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர்  விநியோகிக்கப்படாத வடக்கு மற்றும் நடு வீதிகளில் மினி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த கிணறுகளில் போதுமான தண்ணீர் வராததால், அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தண்ணீருக்காக பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இதுசம்மந்தமாக ஊராட்சி செயலாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பெண்கள் விரைவில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மினி ஆழ்துளை கிணற்றில் தற்போது, குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வருவதே கிடையாது. இதனால், அருகில் இருக்கும் மினி ஆழ்துளை கிணற்றில் சென்று, பல மணி நேரம் காத்துக்கிடந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். இதனால், எங்கள் குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. தண்ணீர் பிரச்சனையால், கூலி வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால், குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்கள் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்