SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போதிய மழையில்லாததால் தடுப்பணைகள் வறண்டது : விவசாயிகள் வேதனை

2018-04-17@ 12:22:24

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையில்லாததால், தடுப்பணைகளில் தண்ணீரின்றி வறண்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. மழைகாலங்களில் சிறுசிறு வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீர் தடுப்பணை மூலமாக சேமித்து பயன்படுத்தப்பட்டது.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அருகே உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்தது. இப்படி தொடர்ந்து வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழையின்றி ஏற்பட்ட வறட்சியால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது.

கிராமங்களில் உள்ள தடுப்பணை போன்ற நீர்தேக்க பகுதிகளில் தண்ணீர் இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதில், ஆற்றோர பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் இருப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது, விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து கோடை மழை வலுவாக பெய்தால்தான், விவசாய விளை நிலங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்