SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு தொடர்ச்சி மலையில் மலை ஆரஞ்சு விளைச்சல் அமோகம்

2018-04-17@ 12:21:30

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால், மலை ஆரஞ்சு விளைச்சல் அமோகமாக உள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது. இங்கு வானுயர்ந்த மரங்களும், பல்வேறு மூலிகைச் செடிகளும் உள்ளன. மழை காலங்களில் இந்த வனப்பகுதியில் பல்வேறு வண்ண காளான்களும், காட்டுப் பூக்களும், பழங்களும் காய்க்கும். சமீபத்தில் பெய்த மழையால், மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் முதலியார் ஊற்றுப் பகுதியில் மலை ஆரஞ்சுப் பழங்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. மரங்களில் ஆரஞ்சு பழங்கள் பழுத்துள்ளன.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, வெள்ளை மந்தி, கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த பகுதிக்கு வனத்துறை துணையில்லாமல் செல்ல முடியாது. இப்பகுதியில் பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலை ஆரஞ்சு அதிகமாக விளையும், ஆனால், சமீபத்தில் பெய்த மழையால், மலை ஆரஞ்சு மரங்களில் பழுத்து தொங்குகின்றன. இதனுடன் மாதுளம் பழங்களும் பழுத்து தொங்குகின்றன என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்