SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பந்தலூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திகாட்டு யானை அட்டகாசம்

2018-04-17@ 12:05:57

பந்தலூர்: பந்தலூர் அருகே கூவமூலை பாலம்வயல் பகுதியில் உள்ள உஸ்மான், சுபேர் ஆகியோரின் விவசாய நிலத்தில் உள்ள வாழை, பாக்கு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று சூறையாடியது. காட்டு யானையை விரட்ட விவசாயிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் காட்டு யானை தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பொது மக்களை அச்சுறுத்தும்  காட்டு யானையை விரட்டுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காட்டு யானை சேதப்படுத்திய விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்