SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்,சுண்ணாம்பு சூளைகளால் ஆர்.எஸ்.மங்கலத்தில் அழிந்து வரும் பனைமரங்கள்

2018-04-17@ 12:05:10

ஆர்.எஸ்.மங்கலம்: பனை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுவது பனை மரமாகும். பனை மரங்கள் ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி விருதுநகர் போன்ற பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருள்களுமே மிகவும் பயனுள்ளது மட்டுமல்லாமல் மருத்துவக் குணம் வாய்ந்தவை. இவ்வாறு இருக்க சமீப காலமாக பனை மரங்களை செங்கல், சுண்ணாம்பு சூளை போன்றவற்றிக்கு வெட்டி அழித்து வருகின்றனர்.

பனை தொழிலாளர்கள் பனை மரத்தில் இருந்து பதனீர்,கள் போன்றவற்றை இறக்கி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தொழில் செய்து பிழைத்து வந்தனர். அதற்கும் வழியில்லாமல் ஏராளமான குடும்பங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். பதனீர் உடல் சூட்டை தணிப்பதில் மிகவும் உகந்தது. பதனீரில் மஞ்சள் மிளகு சேர்த்து சுட வைத்து குடித்தால் எந்த சளியும் போய் விடும். அதேபோன்று பதனீரில் இருந்து காய்ச்சி எடுக்கும் கருப்பட்டி, மற்றும் கற்கண்டும் மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தவை ஆகும். முதல் முதலில் ஏட்டுக் கல்வியானது பனை மரத்தின் ஓலையில் இருந்துதான் எழுத்தாணி மூலம் எழுதி நம்முன்னோர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

பனையில் இருந்து கிடைக்க கூடிய எந்தப் பொருளும் கழிவு இல்லை. அனைத்து பொருள்களுமே பயன் உள்ளவை. அதில் முக்கியமாக ஓலை பாய், விசிறி தயார் செய்ய பயன்படுகிறது. ஒலை பாயில் படுத்து உறங்கினால் உடலுக்கு நல்லது. இதமான நல்ல உறக்கம் வரும். ஒலை விசிறி கோடை காலத்திற்கு மிகவும் சிறந்தது. ஒலைகளில் வீடு கட்டி குடியிருந்தால் ஏசி தேவையில்லை அவ்வளவு சுகாதாரமாக இருக்கும், நுங்கு, கோடை காலத்திற்கு மிகவும் உகந்தது. அதேபோல் பனங்காய் பனங்கிழங்கு என்று அத்தனையும் பயனுள்ளது. பனைத் தொழில் நலிவுற்று போனதற்கு முக்கிய காரணம் அயல்நாட்டு மது விற்கும், உள்நாட்டில் தயாரிக்கும் மதுபான உரிமையாளர்களுக்கும் அரசுகள் காட்டி வரும் சலுகைகள் தான் காரணம் என்கின்றனர். சாராயம், பிராந்தி, விஸ்கி,ரம் போன்ற பானங்களில் ஏற்படும் தீமையை விடவா அதிகமான தீமையை தந்துவிடும் கள்ளு என்ற பானம்.

பதனீருக்கு கூட சுண்ணாம்பு சேர்க்கனும். ஆனால் கள்ளு இயற்கையாக பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இயற்கை பானம் தான். ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வைக்கின்றனர். இவை தண்ணீர் இல்லாமல் கருகி விட்டது. ஆகையால் மழை காலங்களில் மரக்கன்றுகளை வைக்கலாம். அதற்கு பதிலாக கோடை காலங்களில் பனை மர விதைகளை சேகரித்து ஏரி, குளம், குட்டைகள் சாலை இரு ஓரங்களிலும் நட்டு பராமரித்தால் பனை மரம் தமிழகத்தில் அழிந்து போகாமல் இருக்கும். பனை மரத்திற்கு மற்ற மரங்களுக்கு போல அதிகமான தண்ணீர் தேவையில்லை. வறட்சியை தாங்கி வளரக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பட்டுப்போன பனை மரங்களை வெட்டி வருகின்றனர்.தமிழக அரசு இதற்கான நல்ல திட்டம் தீட்டி எஞ்சியுள்ள பனை மரங்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும். பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2018

  24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்