SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலத்தானியத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு

2018-04-17@ 12:03:35

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ளமேலத்தானியத்தில் தமிழ் புத்தாண்டுவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், சிறுகுடி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகளை அடக்குவதற்கு ஒருகுழுவினருக்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 9 மாடுபிடி வீரர்கள் வீதம் 13 குழுக்கள் இதில் கலந்து கொண்டன.

பின்னர் தனித்தனியாக காளைகள் களத்திள் நடுவில் கட்டப்பட்டன. இதில் 11 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 2 காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கவில்லை. பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை காரையூர், மேலத்தானியம் சுற்றுவட்டார கிராமகளை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்