SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜ் சாகர் அணையில் குறைந்து வரும் நீர் மட்டம்

2018-04-17@ 12:02:32

ஊட்டி: மின் உற்பத்திக்காக நாள் தோறும் காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் நிலையில், அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதில், சிங்காரா மின் நிலையமும் ஒன்று. சிங்காரா புதிய மற்றும் பழைய மின் நிலைங்களுக்கு பைக்காரா, காமராஜ்சாகர் போன்ற அணைகளில் இருந்து தண்ணீர் டனல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கோடை வெயில் சமவெளிப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் நிலையில், மின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மின் தேவை அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்ட ஏதுவாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, சிங்காரா புதிய மற்றும் பழைய மின் நிலையங்கள் நாள் தோறும் இயக்கப்படுகின்றன. இதற்காக, பைக்காரா மற்றும் காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், அணையில் தண்ணீர் அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. காமராஜ் சாகர் அணையில் தண்ணீர் நாள் தோறும் எடுக்கப்படும் நிலையில், அணையின் நுழைவு பகுதியான தலைகுந்தா பகுதியிலும், வறட்சியால் அணையின் நீராதாரங்களும்  தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. மேலும், சேறும் சகதியும் நிறைந்துள்ளதால், தண்ணீரும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்