SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீவைகுண்டத்தில் உணவுத்திருவிழா கோலாகலம்

2018-04-17@ 12:01:35

ஸ்ரீவைகுண்டம்: தமிழ்புத்தாண்டு சித்திரை  திருவிழா  மற்றும் உணவுத்திருவிழா முதல்முறையாக ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி  அணைக்கட்டுப்பகுதியில் கோலாகலமாக நடந்தது. துவக்க விழாவிற்கு, டிஆர்ஓ வீரப்பன் தலைமை வகித்தார். தாசில்தார் தாமஸ்பயஸ் அருள்,   டிஎஸ்பி சகாயஜோஸ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ரங்கசாமி வரவேற்றார். விழாவை சப் கலெக்டர் பிரசாந்த் துவக்கிவைத்தார். செல்லப்பிராணிகள் கண்காட்சியில் உயர்ரக நாட்டு நாய்களின் சிறப்பு அணிவகுப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து, கொங்கராயகுறிச்சி கேம்ப்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரியம்மிக்க   பரதநாட்டியம், கலக்கலான நான்ஸ்டாப் டான்ஸ், எரிபொருள் சிக்கனம், தேசப்பற்று, மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு பிரமிடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதைத்தொடர்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலம்பாட்ட மாஸ்டர் சுப்பையா பாண்டியன் தலைமையிலான சிலம்பாட்ட குழுவினரின் அசத்தலான சிலம்பாட்டத்தையும், யோகா மாஸ்டர் இசக்கிமுத்து தலைமையில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களையும், ஆழ்வை கோல்டு ஸ்டார் மாஸ்டர்   சண்முசுந்தரம் தலைமையில் மாணவர்கள் ரங்கராட்டினம் எனும் புதுவகை கலைநிகழ்ச்சியையும் நடத்தினர். செல்லபிராணிகள் கண்காட்சி, பிரமீடு அமைத்தல், சிலம்பாட்டம், யோகாசனம் போன்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற சிறப்புவிருந்தினர்கள் சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கி   கவுரவித்தனர். விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கடைகளில் பாரம்பரியம்மிக்க சைவ, அசைவ உணவுகள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள்   போன்றவையும், மகளிர் குழுவினர்களின் கைவினைப்பொருட்களும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

விழாவில், துணைதாசில்தார்கள் முருகேசன், ஜஸ்டின், சங்கரநாராயணன், உணவுபாதுகாப்பு அலுவலர் டைட்டஸ், தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்ராஜ், ஆர்ஐ பாண்டியராஜன், கால்நடை மருத்துவர் பூதலிங்கம், செல்லப்பிராணிகள் வளர்ப்பாளர் புதுக்குடிராஜா,   கிராம உதயம் நிறுவனர் சுந்தரேஷன், மேலஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் ராமச்சந்திரன், முன்னாள் பிடிஓ ராஜப்பா வெங்கடாச்சாரி, கேம்பிரிட்ஜ் பள்ளி தாளாளர் பால்ராஜ், வக்கீல்கள் சங்கத் தலைவர் பெருமாள்பிரபு, செயலாளர் சங்கரலிங்கம்,   வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கந்தசிவசுப்பு, சமூக ஆர்வலர் சித்திரை மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்