SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி விவகாரம் : திருச்சி சுடுகாட்டில் சடலம் போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்

2018-04-17@ 12:00:06

திருச்சி : திருச்சி ஒயாமரி சுடுகாட்டில் சடலம் போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பிணம் போல் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருச்சியில் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு உள்பட 11 பேர் விறகு மூலம் சடலங்கள் எரிக்கப்படும் இடத்தின் அருகில் படுத்து போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் வேட்டி மட்டும் அணிந்து, கழுத்தில் மாலையுடன் பிணம் போல் படுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் அய்யாக்கண்ணு உள்பட 11 பேரையும் கைது செய்தனர்.அய்யாக்கண்ணு கூறுகையில், மத்திய மோடி அரசு விவசாயிகளை பிணம் போல் ஆக்கி விட்டது. இதை உணர்த்தவே சுடுகாட்டில் பிணம் போல் படுத்து போராட்டம் நடத்தினோம். வரும் மே 3ம் தேதிக்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்காவிட்டால், டெல்லி சென்று பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அப்போது பிரதமர் வீட்டின் முன் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்