SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்வு

2018-04-17@ 10:19:29

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த எட்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 1,286.36 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.66 புள்ளிகள் உயர்ந்து 34,398.09 புள்ளிகளாக உள்ளது. மின்சாரம், உலோகம், பொதுத்துறை நிறுவனம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.20 புள்ளிகள் அதிகரித்து 10,557.55 புள்ளிகளாக உள்ளது.  

பவர் கிரிட், எம் & எம், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், நிலக்கரி இந்தியா, டாக்டர் ரெட்டிஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் விலை 3.27% வரை அதிகரித்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.25% சரிந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.02% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.01% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.87% வரை அதிகரித்து முடிந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்