SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசிமேட்டில் பயங்கரம் ... பிரபல ரவுடிக்கு வெட்டு

2018-04-17@ 01:04:11

காசிமேடு: காசிமேட்டில் பிரபல ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார், 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ் (26). பிரபல ரவுடி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், புதுவண்ணாரப்பேட்டை எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் வசித்தார். கடந்த 2004ம் ஆண்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதில், ராஜேஷுக்கும் வீடு கிடைத்து அங்கு சென்றார். ஆனால், புதுவண்ணாரப்பேட்டை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் எந்த நேரமும் இருந்து வருகிறார்.

இவர் வழிப்பறியில் ஈடுபடுவது, வியாபாரிகளிடம் மாமூல் வாங்குவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால், அதே பகுதியை சேர்ந்த சிலர், ‘‘ஏரியாவை விட்டு போய்விடு. இங்கு வந்து ஏன் எங்களுக்கு கிடைக்கும் மாமூலை நீ வாங்குகிறாய்’’ என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால், பலமுறை, பலருடன் மோதல் உருவாகி, ராஜேஷூக்கு முன் விரோதம் இருந்து வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காசிமேட்டில் ஒரு ரவுடியை கொலை செய்த வழக்கில் ராஜேஷ் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இரவு ராஜேஷ், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நாகூரான் தோட்டம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த 2 வாலிபர்கள், அவரை மறித்து தகராறு செய்தனர். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஷின் தலை மற்றும் கையில் வெட்டினர். இதில், அவர் அலறி துடித்தபடி ரோட்டில் விழுந்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜேஷை வெட்டியது நாகூரான் தோட்டத்தை சேர்ந்த ஜப்பான் (எ) ஸ்டீபன் (25), சாரா (எ) சரத் (24) ஆகியோர் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இதற்கிடையில் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் வெட்டினார்களா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CrocodilesIndonesia

  300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

 • trumpputinmeet

  பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

 • obamakenya

  கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

 • 17-07-2018

  17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • SnakesDayatGuindy

  சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்