SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு : நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

2018-04-17@ 00:59:03

சென்னை: தி.நகரில் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். பெரியார் குறித்து பாஜ தேசிய செயாலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்படி, சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதனால், ஒரு போலீஸ் ரோந்து வாகனம் எப்போதும் பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெரியார் சிலை முன்பு சிலை முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது நேற்று மாலை ஒரு நபர் கல் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தால் நேற்று மாலையில் தியாகராயநகர் பகுதியில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக, திருவல்லிக்கேணி நடேசன் சாலையை சேர்ந்த கார்த்தி (27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்தி குடிபோதையில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறினான். இவர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்