SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடா இந்தியா? ராமதாஸ் கேள்வி

2018-04-17@ 00:45:41

சென்னை: தொடரும் பாலியல் வன்கொடுமைகளால் இந்தியா குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிட்டதா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது குழந்தை ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோகம் மறைவதற்குள்ளாக  குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி அதேபோல்  கொடூரமாக சிதைத்து கொல்லப்பட்டிருக்கிறாளே? காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன.  இதில் கொடுமை என்னவென்றால் ஆசிஃபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பாஜ  அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியது தான். இப்போதும் ஆசிஃபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல்  கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.

இந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்ப்பட்டிருக்கிறார். இதே போன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. லக்னோவில் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுமி ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அவளைப் பிடித்து விசாரித்த போது தான் உன்னாவோ பகுதியைச் சேர்ந்த அச்சிறுமியை அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் ஷெங்கார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மாறாக, சிறுமியின் தந்தையை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், காவல்நிலையத்திலேயே அடித்துக் கொன்று விட்டனர்.   தமிழகத்தில் இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட எவரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை என்பது சோகம். இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  இவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்