SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும்

2018-04-17@ 00:45:11

சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்