SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.பி.எல் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காவலரை தாக்கிய நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

2018-04-17@ 00:44:09

சென்னை: ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது காவலரை தாக்கிய நபரை பிடிக்க போலீசார், பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல்.போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் கடந்த செவ்வாய் கிழமை மாலை சென்னை மாநகரமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தின் போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தாக்கியதில், சங்கர்நகர் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் செந்தில் காயமடைந்தார்.

மேலும் சில கிரிக்கெட் ரசிகர்களும் தாக்கப்பட்டனர். இதில் காவலர் தாக்கப்பட்டது, கிரிக்கெட் ரசிகர்கள் தாக்கப்பட்டது ஆகியவை குறித்து திருவல்லிக்கேணி போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அண்ணாசாலையில் மறியலின் போது எஸ்.ஐ. உட்பட 3 போலீசாரை தாக்கியது, மைதானத்திற்குள் காலணி வீசிய உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து,போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த குயில் தோப்பு ஆல்பர்ட் ஸ்டாலின் என்பவரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் காவலர் செந்திலை தாக்கிய நபரை போலீசார்  வலை வீசி தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாருக்கு பயந்து தலை மறைவாகி உள்ளதால், அவரை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில், காவலர் தாக்கப்படுவது போல வீடியோ பதிவையும், காவலரை தாக்கிய நபரின் புகைப் படத்தையும் வெளியிட்டு, அவர் குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு  தக்க சன்மானம் அளிக்கப்படும். அதே போல், தகவல் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும். என கூறி திருவல்விக்கேணி காவல் ஆய்வாளர்  மோகன்தாஸ் தொடர்பு எண்ணான 9498130317 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்