SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டென்மார்க் பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

2018-04-17@ 00:43:20

புதுடெல்லி: டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியை பலாத்காரம் செய்த வழக்கில், 5 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுலா பெண் பயணி கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். டெல்லியில் உள்ள இடங்களை சுற்றி பார்க்க சென்ற அவரை கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கத்திமுனையில் கும்பல் ஒன்று மிரட்டி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது. அதோடு, அப்பெண்ணிடம் இருந்த பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றது. இந்த சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வீடற்று தெருவில் சுற்றித்திரியும் கும்பல் என்பது போலீசாரின் விசாரணையின் தெரியவந்தது.

மேலும், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்தியாவை சுற்றி பார்க்க தனது கணவருடன் வந்த அப்பெண், டெல்லி பகர்கன்ஞ்ச் பகுதியிலுள்ள ஓட்டல் ஒன்றில் கணவருடன் அறை எடுத்து தங்கினார். பின்னர் ஆக்ரா சென்று பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அதன்பின், ஜனவரி 13ம் தேதி டெல்லி திரும்பினார். ஆனால், ஓட்டலுக்கு வரும் வழியை தவறிவிட்ட அவர், கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட கும்பலை சேர்ந்த ஒருவனிடம் வழிகேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர் தனது கூட்டாளிகளை வரவழைத்து அப்பெண்ணை அருகிலுள்ள டிவிஷனல் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள பகுதிக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான இந்த வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு மற்றும் சிறை தண்டனையை எதிரித்து குற்றவாளிகள் 5 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் ஐ எஸ் மேதா அடங்கிய அமர்வு, விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்