SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்ச் மாதத்தில் மொத்த விலை பண வீக்கம் 2.47%

2018-04-17@ 00:41:38

புதுடெல்லி: மொத்த விலை பண வீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த விலை பண வீக்கம் 5.11 சதவீதமாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.48 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்கம் பெரிய அளவில் மாற்றமின்றி சற்று குறைந்து 2.47 சதவீதமாக உள்ளது. பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக உணவு பொருட்கள் விலை சரிவை சந்தித்துள்ளன. உணவு பொருட்கள் மீதான பண வீக்கம் கடந்த மார்ச்சில் 0.29 சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் இது 0.88 சதவீதமாக இருந்தது. பருப்பு விலை 20.58 சதவீதம், காய்கறிகள் 2.7 சதவீதம், கோதுமை 1.19 சதவீதம், முட்டை, இறைச்சி மற்றும் மீன்கள் 0.82 சதவீதம் விைல குறைந்துள்ளன என மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வெங்காயம் விலை 42.22 சதவீதம், உருளைக்கிழங்கு 43.25 சதவீதம் என தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. உற்பத்தி பொருட்களின் விலை 3.03 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல் எரிபொருட்கள் விலை 3.81 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.  இதுகுறித்து இக்ரா நிறுவனம் கூறுகையில், சர்வதேச சந்தையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்