SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வேறு நாடுகள் மூலம் ஏற்றுமதி செய்ய திட்டம் : அமெரிக்க வரி விதிப்பில் இருந்து தப்ப சீன நிறுவனங்கள் குறுக்கு வழி

2018-04-17@ 00:41:12

புதுடெல்லி: அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, வேறு நாடுகளில் இரந்து சீன உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய உற்பத்தி துறையினர் சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்துக்கு 25 சதவீதமும், உருக்குக்கு 10 சதவீதமும் வரி விதித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 128 பொருட்களுக்கு  சீனா  சுமார் 20,000 கோடி அளவுக்கு வரி விதித்தது. இதை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரை வரி உயர்த்தியது. அதாவது சுமார் 3.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த வரி உயர்வு உள்ளது. இதனால் விண்வெளி, தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சீனாவை குறிவைத்து தொடங்கப்பட்ட இந்த வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண சீனா முன்வந்தாலும், பதிலடி கொடுப்பதில் எந்த விதத்திலும் சளைக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 106 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ளது சீனா.

சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு வைத்து வருகிறது. அமெரிக்காவில் தயாராகும் எலக்ட்ரானிக் பொருளை அப்படியே காப்பியடித்து சீனா மலிவு விலையில் விற்பனைக்கு வெளியிடுவதால் அமெரிக்க நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றன. அதோடு இரு நாடுகளிடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிக அளவில் உள்ளது. இந்த இரு நாடுகளிடையே வர்த்தகப்போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சீன நிறுவனங்கள் பல மாற்று வழியை ஆராயத் தொடங்கிவிட்டன. அதாவது சீனாவில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்குதான் அமெரிக்கா வரி விதித்து வருகிறது. இதற்கு மாற்றாக, சீனாவில் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்  அவற்றை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து, சீன தயாரிப்பு என்ற அடையாளம் இல்லாமல் அங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சீன உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்காலிக தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்