SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை விலை 10 காசு உயர்வு

2018-04-17@ 00:40:09

ஈரோடு: நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைக்கோழி பண்ணை இயங்கி வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 300 முட்டைக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை விலை ஒருங்கிணைப்புக்குழு மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி
மாதம் வரலாறு காணாத அளவாக முட்டை விலை 5.16ஆக விலை உயர்ந்து காணப்பட்டது. பின்னர், படிப்படியாக விலை குறைந்து கடந்த வாரம் 3.50 ஆகவும், நேற்று 10 காசு மட்டும் உயர்ந்து 3.60 ஆக விலை இருந்தது. முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கட்டுப்படியான விலை கிடைப்ப தில்லை என முட்டைக்கோழி பண்ணையாளர்கள் புலம்பு கின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்