SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 நாட்களுக்கு முன்பு மாயமான பெண் சடலமாக மீட்பு : கணவனை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்

2018-04-17@ 00:39:36

பெங்களூரு: 10 நாட்களுக்கு முன்பு மாயமான பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் கணவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா குட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவரது மனைவி சாரதாம்மா. 10 நாட்களுக்கு முன்பு சாரதாம்மா மாயமானார். உறவினர்கள், அவரை பல்வேறு இடத்தில் தேடி அலைந்தனர், கிடைக்கவில்லை. இறுதியாக இது குறித்து நரசிம்மமூர்த்தியின், சகோதரர் வெங்கட்ராமன் என்பவர் சேலூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நரசிம்மமூர்த்தியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. தனிப்படை அமைத்து அவரை கண்காணித்தனர்.
இந்நிலையில் நேற்று குட்டேனஹள்ளி பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர்.

அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; சாரதம்மாவிற்கும், குட்டேனஹள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த நரசிம்மமூர்த்தி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் சாரதாம்மா கேட்கவில்லை. இதையடுத்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன்பு மனைவியை ஏமாற்றிய, நரசிம்மமூர்த்தி, அவரை கோவிலுக்கு சென்று வரலாம் என்றுகூறி குண்டல் பேட்டைக்கு அழைத்து சென்றார். அங்கு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அவர் சடலத்தை குண்டல்பேட்டை வனப்பகுதியில் வீசிவிட்டு திரும்பியுள்ளார். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார், அவரை குண்டல்பேட்டை வனப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சாரதம்மாவின் எலும்பு கூடும் மட்டும் கிடைத்தது. அதை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அந்த எலும்பு கூடு சாரதம்மாவிற்கு உரியதுதான் என்பது உறுதியானது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சேலூர் போலீசார் நரசிம்மமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்