SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடும் கோடையால் கறிக்கோழி உற்பத்தி செலவு அதிகரிப்பு : உரிய விலை கிடைக்காததால் நஷ்டம்

2018-04-17@ 00:38:36

கோவை: தமிழகத்தில் உற்பத்தியாகும் கறிக்கோழிகளுக்கு கடந்த ஒரு மாதமாக நிலவும் கடும் கோடையால் உற்பத்தி செலவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.அதற்கேற்ப விற்பனை விலை கிடைக்காததால் 1.68 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தமிழகத்திலுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் கறிக்கோழி வளர்த்து, 6  வாரங்களுக்கு பின் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு வாரம்தோறும் 70 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 40 லட்சம் கிலோ கறிக்கோழி தமிழகத்திலும், 30 லட்சம் கறிக்கோழி பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நிலவும் கடும் கோடையால் பண்ணைகளில் கறிக்கோழிகளின் இறப்பு விகிதமும், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடும் கோடையால் ஒரு மாதமாக கறிக்கோழிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பண்ணைகளில் 5 சதவீத கறிக்கோழிகள் இறந்து விடுவது வழக்கம். தற்போதைய கடும் கோடையால் இறப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒரு கறிக்கோழி 2 கிலோ எடையை அடைய 40 நாள் ஆகும். கடும் கோடையால் 50 நாளாகிறது. இதனால் தீவன செலவு அதிகரிப்பு, பண்ணை வாடகை கட்டணம், மின் கட்டண செலவு கூடுதலாகிறது. இதனால் கறிக்கோழி உற்பத்தி செய்ய 20 சதவீத செலவு அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய 65 செலவாகும். தற்போது 78 ஆகிறது. ஆனால், கடந்த ஒரு மாதமாக அதிகபட்சம் ஒரு கிலோ 72க்கு மேல் விற்பதில்லை. இதனால் கிலோவிற்கு 6 வீதம் கடந்த ஒரு மாதத்தில் 2.80 கோடி கறிக்கோழிகள் மூலம் 1.68 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வரும் 2 மாதத்திற்கு கடும் கோடை நீடிக்க உள்ளதால், அதற்கேற்ப விலை உயராவிட்டால் நஷ்டம் தொடரும் நிலை ஏற்படும். இவ்வாறு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்