SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சிறு, குறு தொழில்கள் இடம் பெயரும் நிர்பந்தம் : தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய தடை?

2018-04-17@ 00:37:39

கோவை: தமிழகத்தில் ஒரு மெகாவாட்டிற்கு கீழ் மின்சாரம் நுகர்வு செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய மின்வாரியம் தடை விதிக்க உள்ளதால், தொழிற்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை மின்வாரியம் அமல்படுத்தினால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயரும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தின் மூலம் மின்சாரம் உயர்  மின் அழுத்தம், தாழ் மின் அழுத்தம் என 2 வகையாக  வினியோகிக்கப்படுகிறது. இதில் உயர் மின் அழுத்த வகையை குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் பயன்படுத்தி வருகின்றன. இதில் உட்பிரிவாக ஒரு மெகாவாட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் என்றும், ஒரு மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் நுகர்வு செய்பவர்கள் தனியாரிடமும் மின்கொள்முதல் செய்து கொள்ளலாம் என்கிற வாய்ப்பு கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. அதை தொடர்ந்து, ஒரு மெகாவாட்டிற்கு கீழ் மின்சாரம் நுகர்வு செய்பவர்களும் தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதற்கான அனுமதி கடந்த 2010ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இந்நிலையில், ஒரு மெகாவாட்டிற்கு கீழ் நுகர்வு செய்யும் தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தனியாரிடம் கொள்முதல் செய்யக்கூடாது, மின்வாரியத்திடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும், என்பதற்கான திட்டத்தை மின்வாரியம் தயாரித்துள்ளது. இதை விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கோவையிலுள்ள சிறு, நடுத்தர தொழிற்துறையினர் கூறியதாவது: மின்வாரியத்திடம் மின்சாரம் வாங்குவதை காட்டிலும் தனியாரிடம் வாங்கினால் ஒரு யூனிட்டிற்கு ₹1.80 வரை மிச்சமாகும். இதனால் தொழிற்துறையினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் தனியாரிடம் மின்சாரம் வாங்கி கொள்வதற்கான அனுமதியை மின்வாரியம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அதை வழங்குவதில் காலதாமதம் செய்வதோடு, ஒரு மெகாவாட்டிற்கு கீழ் மின்சாரம் நுகர்வு செய்யும் தொழிற்சாலைகள் தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய வெகு விரைவில் தடை வர உள்ளது, என்று மின்வாரியத்தினர் தொழிற்துறையினரிடம் வாய்மொழி தகவலாக தெரிவித்து வருகின்றனர்.

இது நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு மெகாவாட்டிற்கு கீழ் உயர் மின் அழுத்தம் பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம். ஒரு மெகாவாட்டிற்கு கீழ் மின் நுகர்வு செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 800க்கு மேல் உள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. இவை கடுமையாக பாதிக்கப்படும். ஒரு மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் நுகர்வு செய்யும் பெரிய தொழிற்நிறுவனங்கள் மட்டுமே தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய வாய்ப்பு தொடரும். இதனால் தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழியும் நிலை ஏற்படும். இவை தங்களை தற்காத்து கொள்ள பிற மாநிலங்களுக்கு இடம்பெயரும் நிர்ப்பந்தம் ஏற்படும். ஒரு மெகாவாட்டிற்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் தொடர்ந்து தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்