SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவி தீவிரவாதம் என்று ராகுல் கூறவில்லை : காங்கிரஸ் விளக்கம்

2018-04-17@ 00:34:47

புதுடெல்லி: ‘ஐதராபாத் மசூதி வழக்கில் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை ராகுல் பயன்படுத்தவில்லை’ என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் 2007-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரவீந்தர் ரெட்டி நேற்று மாலையே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கருத்து தெரிவித்தபோது, ‘காவி தீவிரவாதம்’ என்ற வார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜ செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா தெரிவித்தார்.

இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.எல் புனியா கூறுகையில், ‘‘அமேதி, ரேபரேலி தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தியிடம் தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் ஒரு நிகழ்ச்சி முடிந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு காரில் புறப்பட்டபோது இந்த கேள்வியை கேட்டதால், எந்த பதிலும் அவர் சொல்லாமல் டிரைவரை காரை ஓட்டும்படி கூறிவிட்டார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி காவி தீவிரவாதம் என்று கருத்து தெரிவித்து இருக்க முடியும்?. அவர் ஒரு போதும் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட செய்தி வதந்தி. தீவிரவாதம் என்பது குற்ற மனநிலையில் உள்ளவர்கள் ஈடுபடுவது. அதனை எந்த மதத்துடனும், சாதியுடனும் இணைக்க கூடாது என்பதுதான் காங்கிரஸ் கருத்து’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்