SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ்அப் ‘பந்த்’தால் பரபரப்பு கேரளாவில் பஸ்கள் மீது கல்வீச்சு : வன்முறையில் ஈடுபட்டதாக 15 பேர் கைது

2018-04-17@ 00:32:36

திருவனந்தபுரம்: காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் நேற்று சமூக வலைதளங்கள் மூலம் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல இடங்களில் மிரட்டி கடைகள் அடைக்கப்பட்டன.  போலீசார் மற்றும் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் பாலத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து கேரளாவில் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக இணையதளங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் தகவல்கள் பரவியது. முஸ்லிம் அமைப்புகள் உள்பட எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் பஸ்கள் ஓடின. கடைகள் திறந்திருந்தன. இதற்கிடையே காலை சுமார் 9 மணிக்கு காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் உள்பட வட மாவட்டங்களில் சில கும்பல்கள் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினர். மேலும் இந்த கும்பல் அரசு மற்றும் தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தின. மலப்புரத்தில் பஸ் மீது கல் வீசியதில் டிரைவர் காயமடைந்தார். கோழிக்கோடு, தாமரசேரி, கொயிலாண்டி, வடகரை உள்பட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் நடந்தது. இந்த நிலையில் கண்ணூரில் வன்முறையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்