SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக முதுகு வலியுடன் வெற்றிக்காக போராடிய மகேந்திரசிங் டோனி

2018-04-17@ 00:30:17

சண்டிகர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக முதுகுவலியுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி, கடைசி வரை வெற்றிக்காக போராடிய ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் ஆட்டம் சண்டிகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் சேர்த்தது. 198 ரன் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, வாட்சன் (11), முரளி விஜய் (12), பில்லிங்ஸ் (9) விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. அம்பாதி ராயுடு 35 பந்தில் 49 ரன் சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் டோனி தனி ஆளாக வெற்றிக்காக போராடினார். முதல் 2 லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி வரை போராடி த்ரில் வெற்றி பெற்றது. இதேபோல, கிங்ஸ் லெவனுக்கு எதிராகவும் த்ரில் வெற்றி பெறும் கட்டத்திற்கு ஆட்டத்தை கொண்டு வந்தார் டோனி. முதுகுவலியுடன் விளையாடிய அவர், போட்டியின் இடையே சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

அதே வலியுடன் போராடிய டோனி, கடைசி ஓவரில் 17 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால், மோகித் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் டோனியால் 12 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. துரதிஷ்டவசமாக சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களுடன் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டோனி 44 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 போட்டியில் டோனியின் அதிகபட்ச ரன் இதுவே.

இப்போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றாலும் டோனியின் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். ‘‘சிஎஸ்கே தோற்றாலும், டோனி ஜெயித்து விட்டார்’’ என்றும், ‘‘போட்டியின் முடிவு எதுவானாலும், டோனி அசத்திவிட்டார். அதுவே போதும்’’ எனவும் பலர் பாராட்டியுள்ளனர். போட்டிக்கு பின் பேட்டியளித்த டோனி, ‘‘கடைசி நேரத்தில் முதுகு வலியால் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும், கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்துள்ளார். அதனால், முதுகை வளைக்காமலே, என்னால் ரன்களை சேர்க்க முடிந்தது’’ என்றார்.  அடுத்ததாக சிஎஸ்கே அணி தனது 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி வரும் 20ம் தேதி புனேவில் நடக்கிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்