SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆர்சிபிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை ... தோல்வியிலிருந்து மீளுமா மும்பை?

2018-04-17@ 00:27:32

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் ஹாட்ரிக் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் வெற்றியை எதிர்நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.  மும்பையில் நடக்கும் இப்போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக கருதப்படுகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சீசன்-11 தொடரில் விளையாடிய முதல் 3 போட்டியிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. முதல் லீக் போட்டியில் சிஎஸ்கேயிடம் வீழ்ந்த மும்பை அணி, அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி  டேர்டெவில்சிடமும் பணிந்தது. இதனால், சொந்த மண்ணில் இன்றைய போட்டியில் ஆர்சிபியை வென்று வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மும்பை தோற்ற 3 போட்டியிலும் கடைசி வரை போராடியே தோல்வி கண்டுள்ளது. கடைசி கட்ட தவறுகளை மும்பை வீரர்கள் திருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், ரோகித், போலார்ட், சூர்ய குமார் யாதவ், குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, லீவிஸ், இஷான் கிஷான் என பலமான பேட்டிங் வரிசை இருந்தும் இவர்கள் 3 போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை.

பந்துவீச்சிலும் மும்பை அணியில் பும்ரா, முஷ்டாபிகுர் ரஹ்மான் என சிறந்த வீரர்கள் உள்ளனர்.  இளம் பந்துவீச்சாளர்கள் மாண்கண்டே சிறப்பாக பந்துவீசி வீசி வருகிறார். அதே நேரத்தில் ஆர்சிபியை பொறுத்த வரையில் 3 போட்டியில் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக உமேஷ் யாதவ், சாஹல் அபாரமாக பந்துவீசி எதிரணியின் ரன் குவிப்பை பெருமளவில் கட்டுப்படுத்துகின்றனர்.

பேட்டிங்கை பொறுத்த வரையில், கோஹ்லி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், டிகாக் என எந்த இலக்கையும் சேஸ் செய்யக் கூடிய வீரர்கள் உள்ளனர். எனவே, மும்பை அணி 200க்கும் அதிகமான ஸ்கோர் செய்தால் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.
ஆர்சிபி அணியின் கேப்டன் கோஹ்லி கடந்த போட்டியில் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியிருப்பது மும்பைக்கு சிக்கலை அதிகரிக்கக் கூடியது. எனவே, மும்பை வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே, சொந்த மண்ணில் முதல் வெற்றியுடன் தோல்விக்கு விடை கொடுக்க முடியும்.  எனவே, இன்றைய போட்டியில் உச்சகட்ட விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), பும்ரா, ஹர்திக் பாண்டியா, போலார்ட், முஷ்டாபிகுர் ரஹ்மான், சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா, இஷான் கிஷான், ராகுல் சாஹர், எவின் லீவிஸ், சவுரப் திவாரி, பென் கட்டிங், பிரதீப் சங்வான், ஜீன் பால் டுமினி, தஜிந்தர் சிங், சரத் லும்பா, சித்தேஷ் லாட், ஆதித்யா தாரே, மார்கண்டே, அகிலா தனஞ்ஜெயா, அன்குல் ராய், மோஷின் கான், நிதீஷ், மெக்கிளானகன் மற்றும் மில்னே.

ஆர்சிபி: விராத் கோஹ்லி (கேப்டன்), டிகாக், மெக்கல்லம், டிவில்லியர்ஸ், சர்பிரஷ் கான், மன்தீப் சிங், கிறிஸ்வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், சாஹல், கிராண்டோம்மி, மொயீன் அலி, வோஹ்ரா, சவுத்ரி, நவ்தீப் சைனி, முருகன் அஷ்வின், நேகி, முகமது சிராஜ், கோரி ஆண்டர்சன், பார்திவ் படேல், அனிருத்தா ஜோஷி, தேஷ்பாண்டே மற்றும் டிம் சவுத்தீ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்