SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் : டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-04-17@ 00:27:31

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 66 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பதக்கப்பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆடவருக்கான பளுதூக்கும் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அஜந்தா சரத் கமல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் - கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற சத்தியன், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல்-சவுரவ் கோஷல் இணை, ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி ஆகியோருக்கும் திமுக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச அளவிலான போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்ளை வாங்கிக் குவித்து தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு” இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்