SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீ விபத்தை ஏற்படுத்தி தப்பிக்க முயற்சி : ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கையாடல் செய்த ஊழியர் கைது

2018-04-17@ 00:25:59

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கையாடல் செய்த ஊழியரை  போலீசார் கைது செய்தனர். அத்துடன், அவரிடமிருந்து ரூ. 16 லட்சத்து 24 ஆயிரத்தி 300ஐ பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம்மிலிருந்து 13ம்தேதி இரவு திடீரென புகை வந்ததையறிந்து வந்த வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை பிரித்து பார்த்தபோது அதில் ரூ. 6.5லட்சம் மட்டுமே இருந்தது. அதிலும் 5 நோட்டுகள் லேசாக எரிந்து இருந்தது. கடந்த 11ம் தேதி மாலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 22 லட்சத்து 88 ஆயிரத்து 500 இருந்தது. மறுநாள்(12ம்தேதி) சுமார் 10 நபர்கள் பணம் எடுத்தநிலையில் 6.5லட்சம் மட்டுமே இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பணம் வைக்கும் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பாபு(43), அவருடன் வேலை செய்யும் சிவகுமார், சங்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ 16 லட்சத்து 24 ஆயிரத்து 300 கையாடல் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். இதையடுத்து கையாடல் செய்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏடிஎம் மிஷினுக்கு தீ வைத்தது ஏன்?

பாபு கடந்த 3 நாட்களாக நைனார்பாளையத்தில் உள்ள ஏடிஎம்மில் தனியாகவே சென்று பணம் வைத்துள்ளார். அப்போது கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் கறவை மாடு வாங்கியுள்ளார். தற்போது வரவு, செலவு பார்க்க அதிகாரிகள் வருவதாக இருந்ததால் எங்கே மாட்டிக்கொள்வோமோ என பயந்து தின்னர் என்ற பொருளை ஏடிஎம் இயந்திரத்தினுள் ஊற்றி தீவைத்துள்ளார். தீவிபத்தில் பணம் முழுவதும் எரியாததால் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்