SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெ.தேசத்தில் இணைகிறார்..!

2018-04-17@ 00:23:48

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் விரைவில் இணைய உள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் சகோதரர் கிஷோர் குமார் ரெட்டி. இவரை மாநில நீர்ப்பாசனத்துறை வளர்ச்சிக்கழகத் தலைவராக மாநில அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து கலிகிரியில் உள்ள கிஷோர் குமார் ரெட்டியை தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கிஷோர் குமார் ரெட்டி கூறியதாவது:

மாநில பிரிவினையால் பாதிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முதல்வர் சந்திரபாபு நாயுடு பாடுபட்டு வருகிறார். என் மீது நம்பிக்கை வைத்து நீர்ப்பாசனத் துறையில் தலைவர் பதவி வழங்கியுள்ளார். என் மீதுள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடந்துகொள்வேன்.  வரும் தேர்தலில் கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற பாடுபடுவேன். விரைவில் எனது சகோதரரும், முன்னாள் முதல்வருமான கிரண்குமார் ரெட்டியும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்