SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் டி20 லீக் : டெல்லியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா ரைடர்ஸ்

2018-04-16@ 23:12:28

கொல்கத்தா: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தாவின் ரானா, ரஸ்ஸல் அதிரடியாக ஆடியதால் டெல்லி டேர்டெவில்ஸ்  அணி 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், நரைன் துவக்க வீரர்களாக களமிறங்கினர். நரைன் (1) வந்த வேகத்தில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா தனது வழக்கமான அதிரடியை காட்டினாலும், அதிக நேரம் தாக்குபிடிக்கத் தவறினார். அவர் 35 ரன் (19 பந்து, 3 சிக்சர், 2 பவுண்டரி) சேர்த்த நிலையில் நதீம் பந்தில் ஆட்டமிழந்தார்.மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரானா, உத்தப்பாவின் பணியைத் தொடர்ந்தார். ஒருமுனையில் இவர் விரைவாக ரன் சேர்க்க, மறுமுனையில் பொறுமையாக விளையாடிய லின் 31 ரன்னிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது 13.4 ஓவரில் 117 ரன் என ஸ்கோர் இருந்த நிலையில் ரஸ்ஸல் களமிறங்கினார். முகமது ஷமியின் பந்துவீச்சை சந்தித்த முதல் ஓவரிலேயே ரஸ்ஸல் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். ரானாவும், ரஸ்ஸலும் மாறி மாறி விளாச ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

கொல்கத்தாவின் ஸ்கோரும் எகிறியது. இந்த ஜோடி 22 பந்தில் 61 ரன் சேர்த்தது. ரஸ்ஸல் 12 பந்தில் 6 சிக்சருடன் 41 ரன் விளாசிய நிலையில், போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். ரானா 30 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 35 பந்தில் 59 ரன் (4 சிக்சர், 5 பவுண்டரி) விளாசிய நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ரானாவின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டியது.

ஆனால், கடைசி ஓவரை அபாரமாக வீசிய டிவாடியா 3 விக்கெட் கைப்பற்றி 1 ரன் மட்டுமே கொடுக்க, கொல்கத்தா அணி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. முதல் 10 ஓவரில் 85 ரன் சேர்த்த கொல்கத்தா, அடுத்த 10 ஓவரில் 115 ரன் சேர்த்தது.அடுத்ததாக 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா பந்து வீச்சில் தொடர்ந்து டெல்லி விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. ராய் 1, அய்யர் 4, காம்பீர் 8 ரன்னில் அடுத்தடுத்து அவுட் ஆனால் 3 ஓவரில் 24 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து டெல்லி தடுமாறியது. அதன்பின் ரிஷிபன்ட், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். ஸ்கோர் 86ஆக இருந்த போது ரிஷிபன்ட் 43 ரன்னில்(26 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 22பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் திவாடியா 1, விஜய் சங்கர் 2, மோரிஸ் 2, ஷமி 7ரன்னில் ஆட்டம் இழந்து வரிசையாக வெளியேறினர். இதனால் 14. 2 ஓவரில் 129 ரன்னில் டெல்லி ஆல் ஆவுட் ஆனது. இதன் மூலம் 71 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் நரேன், குல்தீப்யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சாவ்லா, ரசல், சிவம், குரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது 35 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன் குவித்த ராணாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா இரண்டாவது வெற்றியை பெற்றதோடு, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2018

  24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்