SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை: மக்களவையில் அமைச்சர் தகவல்

2018-03-14@ 19:04:59

புதுடெல்லி: விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை, அதற்கு ஆதரவும் அளிக்கமாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்:நாட்டில் விவசாயிகளின் துயர் துடைக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவர்களின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் வங்கிகளில் எளிதில் கடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. அதற்கு ஆதரவும் அளிக்காது. கடன் தள்ளுபடி அளிப்பது என்பது, கடன் வழங்குவதிலும், அதை மீட்பதில் எதிர்மறையான விளைவுகளையும், சில பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்.

கடந்த 2006-07-ம் ஆண்டு முதல் விவசாயிகளின் கடன்சுமையைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை பயிர்க் கடன் அளித்தோம், கடனை முறையாகக் கட்டும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளித்தோம்.ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் விவசாயிகள் எந்தவிதமான சிரமங்களையும் எதிர்கொள்ளவில்லை. தங்கள் விளைபொருட்களை சந்தையில் விற்பதிலும் எந்த இடர்ப்பாடுகளையும் அவர்கள் சந்திக்கவில்லை. அதேபோல தயாரிப்பாளர்களுக்கும், சில்லரை விற்பனையாளர்களுக்கும் நேரடியாக லாபம் சென்றது என்ற குற்றச்சாட்டும் இல்லை. இவ்வாறு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்