SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்ந்ததா மோடி அலை...மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு : 3 மக்களவை இடைத்தேர்தல்களிலும் மண்ணை கவ்வியது

2018-03-14@ 17:35:14

லக்னோ: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்புர், உள்ளிட்ட 3 மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது தகர்க்கப்பட்டது.

உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள்:

யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்பட்ட கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் புல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. புல்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் கே.எஸ்.பட்டேலை தோற்கடித்துள்ளார்.

பீகார் இடைத்தேர்தல் முடிவுகள்:

பீகார் மாநிலத்தில் பாகுபா, ஜெகனாபாத் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஜெகனாபாத் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாபுவா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிங்கி ராணி பாண்டே வெற்றி பெற்றுள்ளார். அராரியா மக்களவை தொகுதியில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது. 22-வது சுற்று முடிவில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 57,791 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

அடுத்த இடத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளது. முன்னதாக பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வர்களாக கேஷவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மாவும் பதவியேற்றனர். இவர்கள், தாங்கள் வகித்துவந்த எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் மேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர், கேஷவ் பிரசாத் மவுரியாவின் புல்பூர் ஆகிய எம்பி தொகுதிகள் காலியாக இருந்தன.

இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறித்தது. இத்தொகுதிகளில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் இடையே போட்டி நிலவியது. ஆளும் கட்சி என்பதால் வெற்றிபெற வேண்டிய கட்டயத்தில் பாஜவும், இழந்த செல்வாக்கை மீட்கும் பொருட்டு முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, காங்கிரஸும் களத்தில் இறங்கின. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே விறுவிறுப்பு ஏற்பட்டது. இறுதியில் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூர், புல்பூர் ஆகிய 2 மக்களவைத் தொகுதியில் பாஜக மண்ணை கவ்வியது. கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் 1998, 1999, 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து ஆதித்யநாத் தொடர்ந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அலை ஓய்ந்தது சிவசேனா தாக்கு

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி குறித்து சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.  நரேந்திர மோடியின் அலை நாட்டில் ஓய்ந்துவிட்டது என்று, அதன் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்