SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு

2018-03-14@ 17:13:02

டெல்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் அளிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. கட்சி தொடங்குவதற்கு முன்பே சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் டிடிவி கட்சிக்கு புதிய பெயர் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்