ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...இடைக்கால மனு தள்ளுபடி
2018-03-14@ 16:42:07

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் தம்மை விடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பேரறிவாளன் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.
1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ள நீதிபதிகள், பேரறிவாளன் குற்றவாளி இல்லை என கருதமுடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கும், தாம் வாங்கி கொடுத்த பேட்டரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டதால், இது குறித்து 4 வாரங்களுக்குள் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:
Rajiv Gandhi assassination Perarivalan Supreme Court conviction ராஜீவ் காந்தி உச்சநீதிமன்றம் மறுப்புமேலும் செய்திகள்
காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்
பாதை வசதி இல்லாத, அபாயகரமான வனப்பகுதி திருமலை குமாரதாரா தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு
இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுபழக்கத்திற்கு அடிமை : எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவிப்பு
காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகன இயக்க விதிகளில் மாற்றம்!
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்